ஒரு சமையல் செய்கிற வீடியோவை எஸ்.டி .ஆரும் ,விடிவி கணேசும் சேர்ந்து வெளியிட்டிருந்தார்கள் .சிம்புவின் சமையல் செய்யும் திறமையைப் பார்த்த விடிவி கணேஷ் “வரப்போற பொண்ணுக்கு சமைக்கிற வேலையே இருக்காது போலிருக்கே ” என்று சிம்புவை கிண்டல் செய்திருந்தார்.
அதற்கு சிம்பு “வரப்போற பொண்டாட்டி கல்யாணம் பண்ணிக்கிட்டு வேலை செய்யவா வராங்க ?என் பொண்டாட்டி சந்தோஷமா இருக்கணும்னுதான் விரும்புவேன் “என்று சொல்லியிருந்தார். இந்த வீடியோ செம வைரல் ஆகியிருக்கு.
இந்த வீடியோவுக்கு பெரிய இடத்து நடிகை பிந்து மாதவி “கரெக்ட்டா சொன்னிங்க சிம்பு.!உங்க பொண்டாட்டியை சந்திக்க நாங்க எல்லோரும் காத்திருக்கிறோம்” என்று டிவீட் பண்ணியிருக்கார் .