இதுநாள் வரை முடங்கிக்கிடந்த சின்னத்திரை சீரியல்கள் விரைவில் படப்பிடிப்பை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபல சீரியல்களை ஒளிபரப்பி வருகிற தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது தங்களின் டீமை முடுக்கி விட்டுள்ளன. கதை விவாதங்களை நடந்து வருகின்றன.
கொரானா ஊரடங்கு முடக்கம் இருக்கிறபோதே இப்படி அவசரம் அவசரமாக கதை விவாதம் செய்ய .சீன் பிடிக்க வேண்டிய அவசியம் என்ன ,தங்களுடைய தொடர்களில் நடித்துவருகிற நடிக நடிகையர்க்கு முன்னதாகவே விவரம் சொல்ல வேண்டிய அவசியம் என்ன…
அங்கேதான் சூச்சுமம் இருக்கிறது என்கிறார்கள்.
ஜூன் மாதத்திலிருந்து சின்னத்திரை ஷூட்டிங் வைத்துக்கொள்ளலாம் என முதல்வர் சைடில் இருந்து சிக்னல் கிடைத்திருக்கிறதாம் .இதனால் சீரியல்காரர்கள் இப்போதிருந்தே தயாராகிறார்கள் என்கிறார்கள்.
சின்னத்திரை ஷூட்டிங் எப்படி போகிறது என்பதை பார்த்தபிறகு பெரிய திரைக்கு அனுமதி கிடைக்கலாம் .
பார்க்கலாம் பயம் இருக்கா இல்லையான்னு!