பாலிவுட்டின் பாதுஷா என்று அழைக்கப்படும் நடிகர் ஷாருக்கானின் ஒரே மகள் சுகானா.லண்டனில் படிக்கிறார்.
விரைவில் பாலிவுட் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.
நடிகையாகவில்லை என்றாலும், அவருக்கு இன்ஸ்டா வில் பாலோயர்ஸ் மிக அதிகம். அவர்களே நிறைய ஃபேன் பேஜ்களை உருவாக்கி சுகானாவின் படங்களை பகிர்ந்து வந்தனர்.
கொரோனா வைரஸால் ஏற்பட்ட லாக்டவுன் காரணமாக சும்மாவே முடங்கி கிடந்த சுகானா, லண்டனில் இருந்து ஆசையுடன் வாங்கி வந்த’ பூ’ப் போட்ட டாப்ஸ்,மற்றும் ப்ளூ கலர் ஜீன்ஸ் அணிந்து தனக்கு போட்டோ ஷூட் நடத்தி,அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு லைக்குகள் அள்ளுவதில் ஆசை.
ஆனால் குவாரன்டைன் காலத்தில் எந்த புகைப்படக்காரரை நம்பி அழைப்பது.?
தன் ஆசையை அம்மா கவுரிகானிடம் பகிர்ந்தார்.ஒரே மகளாச்சே!
அம்மாவே காமிராவை கையில் தூக்கி, மகளை விதவிதமாக புகைப்படங்களை எடுத்து தள்ளினார்.
அத்தனையும் பிரமாதம்.அம்மாவை கட்டியணைத்து முத்தமிட்டு பாராட்டிய சுகானா,அதில் சில படங்களை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு இவை அனைத்தும் என் அம்மா கவுரிகான் எடுத்தது என்றும் மறக்காமல் குறிப்பிட்டுள்ளார்.
இப்புகைப்
புகைப்படங்களைப்பார்த்த சுகானாவின் நெருங்கிய தோழியும்,பிரபல பாலிவுட் நடிகையுமான அனன்யா பாண்டே, ‘உன் ‘டாப்ஸ்’ நல்லா இருக்கு. எனக்கு தருவாயா?என கேட்க, கடுப்பான சுகானா, முதலில் என் ஷார்ட்ஸை திருப்பி கொடு என பதிலளித்துள்ளார் .
அட கடவுளே ! உள்ளாடைகளைக் கூட கடன் கேட்பார்கள் போலிருக்கிறதே.!