கிட்டத்தட்ட லட்சத்தை தொட்டு விடும் என்கிறார்கள் .இன்றைய நிலையில் கொரானா தொற்றுப்பரவல் இந்தியா முழுமைக்குமான 85 ஆயிரத்தை கடந்திருக்கிறது. முழு ஊரடங்கு காரணமாக புலம் பெயர் தொழிலாளர்கள் வாழ வழியின்றி சொந்த ஊருக்கு நடந்தே செல்வதென முடிவெடுத்து சாலைவழி நடைப்பயணத்தைத் தொடங்கினார்கள்.
பின்னர்தான் அரசு சில பகுதிகளுக்கு தனி ரயில் செல்வதாக அறிவித்தது. அகதிகள் எக்ஸ்பிரஸில் செல்ல வழியற்றவர்கள் லாரியை பிடித்து செல்லத் தொடங்கினார்கள் .பலர் தண்டவாளம் வழியாக ஊருக்கு நடந்து சென்றபோது அங்கும் விபத்து ஏற்பட்டு பலர் உயிர் இழந்து இருக்கிறார்கள்
. அதிகாலை ராஜஸ்தானிலிருந்து பீகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் நோக்கி லாரியில் சென்று கொண்டிருந்த புலம் பெயர் தொழிலாளர்கள் 24 பேர் உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோ அருகே ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த செய்தியறிந்த இயக்குநர் பா.ரஞ்சித் தன்னுடைய கடுமையான கண்டனத்தை அரசுக்கு பதிவு செய்திருக்கிறார்.
“பெரும் துயரம் உழைக்கும் மக்களின் உயிர் தின்று பெருகும் நிர்வாக திறனற்ற அரசே, உனது அழிவு வெகு தூரத்தில் இல்லை”