ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் சாராயக்கடைகளை திறப்பதைக் கடுமையுடன் கண்டித்து வருகிறவர்களில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனும் ஒருவர்.
உச்சநீதிமன்றம் வரை சென்றவர்.ஆனாலும் கமலின் முயற்சி வெற்றி பெறவில்லை.
கலர் கலராக டோக்கன் கொடுத்து திறப்பு விழா நடத்தி தமிழக அரசு கல்லா கட்டிவருகிறது. குடிகாரர்களும் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று விட்டார்கள்.
சிலர் சாராயக்கடை முன்பாக கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து திறப்பு விழா கொண்டாடியிருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் . அரசுக்கு செம வசூல்.
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனுக்கு மதுக்கடைகளை திறந்தது பிடிக்கவில்லை. ஜெயலலிதாவின் பிள்ளைகள் என்று வேஷம் போடுகிறவர்கள் தேர்தலில் தப்பிக்க முடியாது என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
“மதுக்கடைகளை மூடியதற்கு தமிழகமெங்குமுள்ள தாய்க்குலம் வாழ்த்துச் சொன்னது. திறந்ததற்கான தீர்ப்பை அதே தாய்க்குலம் சொல்லும்,
மிக விரைவில்.
அப்போது நீங்கள் அம்மாவின் பிள்ளை வேஷம் போட்டுத் தப்பிக்க முடியாது.”என்று தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.