குதர்க்கம் பேசுவதற்கென்றே சிலர் இருப்பார்கள். எதையாவது நோண்டவேண்டும் ,அதன் வழியாக தன்னை மெத்தப்படித்தவர் என சிலர் சொல்ல வேண்டும் என்கிற ஆசை அவர்களுக்கு.!
அவர்களில் ஒருவர்தான் ‘ஆம்பள ‘பட நடிகை மாதவி லதா..இந்த படத்தில் கிரணின் மகளாக நடித்திருந்தார். இவர் தெலுங்கு நடிகை.
விவரமானவர்.விவகாரமானவரும் கூட,!
“கடவுளுக்கே பல மனைவிகள் இருக்கிற போது மனிதனுக்கு இருக்கக்கூடாதா?’என்று கேட்டவர்.
இவர் தெலுங்குப்படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்தபோது சக நடிகர் ஒருவர் டேட்டிங் போகலாமா என்று கூப்பிட்டதாக சொல்லி அந்த நடிகரை குப்புறத் தள்ளினார்.
இன்னொரு சமயத்தில் தன்னை படுக்கைக்கு கூப்பிட்டதாக புகார் சொன்னார். இதனால் இவரது திரை உலக வாய்ப்புகள் குறைந்திருக்கின்றன. இருந்தாலும் அவ்வப்போது தன்னுடைய கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து விடுவார்.
அண்மையில் தெலுங்குப் பட உலகில் இரண்டு முக்கியமான திருமண நிகழ்வுகள்.
ஒன்று பிரபல தயாரிப்பாளரான தில் ராஜூவின் மறுமணம்,மற்றொன்று நடிகர் நிகில் -பல்லவி வர்மாவின் காதல் திருமணம்.
இந்த திருமணங்களை குறித்து கருத்து சொன்னாரா இல்லையா என்பதை பற்றி தெலுங்குப் படஉலகில் பரபரப்புடன் பேசி வருகிறார்கள்
அப்படி என்னதான் மாதவி லதா சொல்லியிருக்கிறார்?
“மாஸ்க் அணிந்து கொண்டு கல்யாணம் பண்ணிக்கொள்ளும் அளவுக்கு அவசரம் என்? அவர்களின் காதல் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய் விட்டதா? ஊரடங்கு முடிகிற வரை காத்து இருக்க முடியாதா?”
இவ்வாறு அவர் பதிவு செய்திருந்தார்.
இந்த பதிவு “நடிகர் நிகிலின் காதல் கல்யாணத்தைப் பற்றியதா என்று கேட்டதற்கு தோள்களை குலுக்கியபடி “எனக்கு தெரியல” என்பதாக சொல்லியிருக்கிறார்.