எஜமானர் என்பவர் யார்? மத்தியில் ஆளுகிற பாஜக அரசு என்கிறார் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன்.
எஜமானர் என்று ஒருவர் இருந்தால் அவருக்குக் கீழே ஒரு வேலைக்காரனோ,அல்லது அடிமையோ ஒருவன் இருந்தாகவேண்டும். வேலைக்காரன் என்றால் வளைந்து கொடுப்பானே தவிர தரையில் விழுந்து வணங்கமாட்டான்.
ஆனால் அடிமையோ? மண் புழுவாக மண்ணுடன் மண்ணாக மறைந்துவிடுவான் என்கிறார் கமல். அந்த அடிமை வேறு யாருமில்லை நம்ம தமிழக அரசுதான் என்பது அவரது கருத்து.!
அதன் விளைவில்தான் இந்த டிவிட்டர் பதிவு வந்திருக்கிறது.