‘5 ஸ்டார்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை கனிகா .
அஜித்துடன் நடித்த வரலாறு தனி அடையாளத்தைத் தந்தது.
தொடர்ந்து தமிழில் சில படங்களில் நடித்து வந்தவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் இல்லை.
மலையாள படங்கள் மீது தனது கவனத்தை திருப்பினார்,
2008-ஆம் ஆண்டு ஷியாம் என்பவரைத் திருமணம் செய்தார்.
சாய் ரிஷி என்ற மகன் உள்ளார். சமீபத்தில் மா என்ற குறும்படத்தை இயக்கி வெளியிட்டார். இது சோஷியல் மீடியாவில் அவருக்கு பாராட்டுக்களைப் பெற்றுத் தந்துள்ளது.

இந்த குவாரன்டைன் நேரத்தில் இன்ஸ்டாகிராமில் தனது பழைய நினைவுகளைப் பகிர்ந்துள்ள கனிகா, தன் கர்ப்பம் குறித்தும் மகன் பற்றியும் சில விஷயங்களை கூறியுள்ளார்.
அதில் அவர் கூறியது, ‘’ நான் கர்ப்பமாக இருந்த போது, என்ன இரட்டை குழந்தையா அல்லது மூன்றா என பலரும் என்னிடம் கேள்வி கேட்டனர்.ஆமாம்.அந்தளவுக்கு என் வயிறு மிகப் பெரியதாக இருந்தது. என் குழந்தை பிறக்கும் போது எடை அதிகமான குழந்தையாகத்தான் இருந்தான். எனக்கு அதில் பெருமையாக இருந்தது. ஆனால் மற்ற அம்மாக்களைப் போல பிரசவத்துக்குப் பிறகு என்னால் என்னை கவனித்துக் கொள்ள முடியவில்லை, காரணம் என் குழந்தை பிறந்த உடனேயே ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்ய வேண்டியிருந்தது.

வாழ்க்கையில் அற்புதங்கள் நடக்கும், என் குழந்தை உயிர் பிழைத்தான்,
ஆனால்,இந்த பதிவு அதற்கானது இல்லை.அதன் பிறகு இயல்பான நிலைக்கு என்னால் எப்படி திரும்ப முடிந்தது என்பது பற்றியது..
நான் உடற்பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் தருகிறேன். சினிமாவில் நடிப்பதற்காக இதைச் செய்கிறேன் என்று நீங்கள் நினைக்கலாம் .
ஆனால் அது உண்மை இல்லை. நான் அதை எனக்காக செய்கிறேன். இது எனது ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக நான் செய்யும் ஒரு முதலீடு .. எனவே தோழமைகளே ஆரோக்கியமாக சாப்பிட முயற்சி செய்யுங்கள், ஃபிட்டாக இருங்கள்”! இவ்வாறு நடிகை கனிகா கூறியுள்ளார்.