சங்கவி நேற்றைய கதாநாயகி. அஜித்துடன் அமராவதியில் அறிமுகமானவர். .பின்னர் விஜய்யுடன் பல படங்களில் நடித்திருந்தார். சரத்குமார் ,விஜயகாந்த் ஆகிய முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார் , சற்று தாராளமானவர். மனம் கோணாதபடி கவர்ச்சியாக நடித்ததால் ஒரு கட்டத்தில் முன்னணி நடிகையாக இருக்க முடிந்தது
பின்னர் உடல் பெருக்கத்தால் திரைப்பட வாய்ப்புகள் வரவில்லை. எதிர்பார்த்த அளவு டி .வி. யிலும் வாய்ப்புகள் இல்லை.2016 ஆம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த ஐ.டி .நிறுவனத்தை சேர்ந்தவரை கலியாணம் செய்து கொண்டார்.
நெடுங்காலமாக குழந்தை இல்லாமல் இருந்தது.
ஆனாலும் 42 ஆம் வயதில் அழகான பெண் குழந்தை பிறந்திருக்கிறது. தாயும் சேயும் நலமுடன் இருக்கிறார்கள்.