ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்கிற மனநிலையிலா மக்கள் இருக்கிறார்கள்.?
இறுக்கமான சூழல்.என்ன நடக்குமோ என்கிற அச்சம். ஆனாலும் அரசாங்கமே சொல்லிவிட்டது வைரஸுடன் வாழப் பழகிக்கொள்ளுங்கள் என்பதாக.!
கொரோனா வைரஸ் பரவுதல் நாளுக்கு நாள் தீவிரமாகி வருவதையடுத்து, ஊரடங்கு 4 வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர். அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, திரையுலக பிரபலங்கள் அவர்களுக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர்.
கடினமான சூழலில் பணி செய்பவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக 100 டாக்டர் இணைந்து, விஜய்யின் மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற குட்டி ஸ்டோரி பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்கள். ( அரசு மெமோ அனுப்பாமல் இருந்தால் சரி! விஜய் பட பாட்டாச்சே ) மருத்துவ துறையைச் சேர்ந்த இவர்களின் இந்த அழகான வீடியோ இணையதள ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இவர்களுக்கு திரையுலகினர் சார்பில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.