இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட்கோலி.
எதிரணியினருக்கு காய்ச்சலை தருகிறவர்.கடுமையான போராளி,சிக்ஸர் போர் என பந்துகளை பறக்க விடுகிறவர்.
இவரது வாழ்க்கையை படமாக்கினால் என்ன?
பாலிவுட்டில் பல நிறுவனங்கள் பணப்பெட்டியுடன் தயாராக இருக்கின்றன. சில வெளிநாட்டு நிறுவனங்களும் விராட்கோலி பயோபிக்கிற்கு டாலரை கொட்ட ரெடி.
சரி, இதில் விராட் கோலியே நடித்தால் என்ன?
“நான் தயார் .ஆனால் ஒரு நிபந்தனை .! நான் நடிக்க வேண்டும் என்றால் என்னுடன் நடிப்பதற்கு அனுஷ்காவும் சம்மதம் சொல்ல வேண்டும்.” என்கிற நிபந்தனையை சொல்லியிருக்கிறார்.
அனுஸ்கா சர்மா கோலியின் மனைவி.பாலிவுட்டில் பெரும்புள்ளி.தயாரிப்பாளர்.
கணவன் மனைவி இருவரும் நடிப்பதாக இருந்தால் அந்த பயோபிக் நிச்சயம் பாக்ஸ் ஆபிசில் ஒரு சாதனையை நிகழ்த்தும் என்பதில் சந்தேகம் இல்லை.
எந்த புண்ணியவானுக்கு மச்சம் இருக்கிறதோ தெரியவில்லை.!