கொரானா கஷ்ட காலம். ஷூட்டிங் இல்ல.தியேட்டர்கள் மூடிக் கிடக்கு. பட்டினி கெடக்கிறோம் .திரை உலக கஷ்டங்கள் குறையணும்னா பெரிய நடிகர்கள் சம்பளத்தைக் குறைக்கணும்னு சிலர் கோரிக்கை வெச்சாங்க.
இதுக்கு அவ்வளவா ரெஸ்பான்ஸ் இல்லிங்க. எந்தப் பெரிய நடிகரும் முணுமுணுக்கல .கோலிவுட்டில் மட்டுமில்ல. டோலிவுட்டிலும் பெரிய எதிர்பார்ப்பு கிடையாது.
அங்குள்ள பெரிய நடிகர்கள் தங்களின் சம்பளத்தைப் பற்றி எந்த விதமான கருத்தும் சொல்லல. இப்படி இருக்கிற நிலையில நடிகை தமன்னாவின் கதையே வேற மாதிரி இருக்கு.!
நடிகர் ரவி தேஜாவின் படத்தின் நடிப்பதற்கு 2.5 கோடி சம்பளம் கேட்டிருக்கிறார் தமன்னா என்கிறார்கள்.
இவரது சம்பளமே 1.5 கோடிதானாம் .ஆனால் ஒரு கோடியை உயர்த்தி கூடுதலாக கேட்பதாக சொல்கிறார்கள்.இது கொரானாவை விட கொடியதாக இருக்கே.!