“தைரியமே புருஷலக்ஷணம்-அதுவும் தைரியலஷ்மியின் புருஷ(ன்)ர் -எத்துனை வைராக்யமுடன்-அத்துணையின் காதல் கணவராக,கௌரவம் காப்பவராக,வைத்தக் காலை பின்வாங்கா வையக வீரராக … Ozhukkam , Thelivu , Thairiyamudan ‘பொன்மகள் வந்தாள்’ வெளியிடுகிறார்.Amazing& வாழ்த்துக்கள்!” என்று இயக்குநர் ,தயாரிப்பாளர் ,நடிகர் பார்த்திபன் தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்.
ஓடிடி தளங்களில் படங்களை வெளியிடுவதற்கு தியேட்டர் அதிபர்கள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் ஓடிடி தளங்களில் படங்களை வெளியிடுவதற்கு பல தயாரிப்பாளர்கள் ஆதரவாகவும் இருக்கிறார்கள். இந்தி ,மலையாளம் ஆகிய மொழிப்படங்களும் அமேசான் நெட் டில் வெளிவருகின்றன.
பொன் மகள் வந்தாள் படம் 29 ஆம் தேதி அமேசான் நெட்டில் வெளியாகிறது. இந்த படம் வெளியான பின்னர் மேலும் பல படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கிறார்கள். தியேட்டர்கள் திறக்கிற வரை காத்திருந்தால் வட்டிக்கு வட்டிதான் கட்டி வதை பட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் நினைக்கிறார்கள்