நவாசுதீன் சித்திக். பாலிவுட்டில் சிறந்த நடிகர். என்றாலும் இவரது அந்தரங்கம் அவ்வளவு புனிதமானது இல்லை என்பார்கள்.இவரைப்பற்றிய குறிப்புகள் அவ்வளவாக அதிகம் கிடைக்கவில்லை.எந்த கேரக்டராக இருந்தாலும் அதை உள்வாங்கி நடிப்பதில் சிறந்த நடிகர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லாத நடிகராக இருக்கிறார்.
கேங்ஸ் ஆஃப் வசேப்பூர், லன்ச் பாக்ஸ், மண்ட்டோ உள்ளிட்ட படங்களில் இவரது நடிப்பு பலராலும் பேசப்பட்டது..
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளிவந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக மிரட்டியவர் நவாசுதீன் .சரி இவருக்கு என்ன? கொரானாவா? இல்லை!
ரம்ஜான் பண்டிகைக்காக மும்பையில் இருந்து உ.பி.யில் இருக்கிற சொந்த ஊரான புதானாவுக்கு சென்றார்.
அவரது வீட்டிலேயே 14 நாட்கள் அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளனர்.
நவாசுதின் சித்திக்கின் மனைவி ஆலியா சித்திக், விவாகரத்து கேட்டு மே 7 -ஆம் தேதி இ மெயில் ,வாட்ஸ் அப் வழியாக நோட்டிஸ் அனுப்பியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரணம் என்ன சொல்லியிருக்கிறார் ஆலியா?
“நிறைய சொல்லலாம்.! ஆனால் அதையெல்லாம் பொது வெளியில் வைத்து விவாதிக்க நான் தயாராக இல்லை. கல்யாணம் பண்ணிய நாளில் இருந்தே பிரச்னைகள். மன உளைச்சல்கள்.
இந்த ஊரடங்கு காலத்தில்தான் அமைதியுடன் அமர்ந்து சிந்திக்க முடிந்தது.
மணவாழ்க்கையில் சுயமரியாதை என்பது முக்கியம்.அது எனக்கு அவசியம்.
இன்னொன்று அவரது சகோதரர் ஷாம்ஸ் பற்றிய பிரச்னை.!
ஆகவே விவாகரத்து ஒன்றே வழி என கருதினேன். என்னுடைய வக்கீல் அபாய் அனுப்பி இருக்கிறார்.
நான் யாருடைய பெயரையும் வைத்துக்கொண்டு பலன் பெற விரும்பவில்லை. என்னுடைய உண்மைப் பெயரான அஞ்சனா கிஷோர் பாண்டே என்றே இனி அழைக்கப்படுவேன்” என கூறி இருக்கிறார்.திருமதி நவாசுதீன்
இந்த விவாகரத்து நோட்டீஸுக்கு நவாசுதின் தரப்பில் இருந்து பதிலும் இல்லை என்கிறார்கள்.
15 நாட்களில் எந்த பதிலும் இல்லையென்றால், சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளாராம் அஞ்சனா கிஷோர் பாண்டே .
.இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.