முந்தானை முடிச்சு …மூர்க்கத்தனமாக பட்டி தொட்டியெல்லாம் ஓடிய படம். ஊர்வசி அறிமுகம். பாக்யராஜின் திரைக்கதை வசனம். இளையராஜாவின் இதயம் தடவிய ராகம். மறக்க முடியாத காட்சிகள்.
இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப்போகிறார்கள் .ஜேஎஸ் .பி .சதீஷ் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் பாக்யராஜ் ,சசிகுமார் இருவரும் இணைந்து பணியாற்றப்போகிறார்கள் .விரைவில் இதர டெக்னீஷியன்கள் பட்டியல் வரலாம்.
ஆனால் இளையராஜா இருப்பாரா? இருக்கமாட்டார் என்றே சொல்லுகிறார்கள். இன்னொரு மர்மம் இந்த படத்தின் இயக்குநர் யார் என்பதுதான்! கதை அதேதான் அதாவது ரீமேக் என்கிறார்கள்.இதற்கான திரைக்கதை வசனத்தைத்தான் பாக்யராஜ் எழுதிக் கொண்டிருக்கிறார். ரிமேக் என்றால் அசல் பெஸ்ட்டா ,ரிமேக் பெஸ்ட்டா என்கிற பிரச்னை வராதா? உண்மையா சொல்லுங்கப்பா முருங்கக்காய் வீரர்களா?
பாக்யராஜ் கேரக்டரில் சசிகுமார், ஊர்வசி கேரக்டரில் கீர்த்தி சுரேஷ்,சாய்பல்லவி அல்லது ராஷ்மிகா ,அல்லது நித்யாமேனன் இவர்களில் யாரோ ஒருவர் நடிக்கலாம். கோபி ,தேனி ஆகிய கிராமியப்பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கப்போகிறது.