வரு என்று அழைக்கப்படுகிறவர் வரலட்சுமி சரத்குமார்.
சண்டக்கோழி 2,சர்க்கார் இரண்டு படங்களும் இவரது பன்முகத் திறமைக்கு சான்றாக அமைந்திருந்தன.
அது நட்போ ,காதலோ என்னவோ நடிகர் விஷாலுடன் இணைத்துப்பேசப்பட்டார்.
தங்களுக்குள் காதல் இருப்பது மாதிரியே மீடியாக்களின் கேள்விகளுக்கும் விஷால் பதில் சொல்லுவார்.கடைசியில் விஷாலின் அதிகாரப்பூர்வ கல்யாண அறிவிப்பினால் காதல் செய்தி உடைந்த டைட்டானிக் கப்பலானது. வதந்தி திசை மாறியது.
அண்மையில் பாஜக தொழிலதிபர் வீட்டுக்கு மருமகளாகப் போகிறார் என்பதாக சில மீடியாக்களில் செய்தி வந்தது. காலப் போக்கில் அந்த செய்தி கரைந்து போனது.
கரைந்து போன கிசுகிசு வேறு வடிவில் உருக்கொண்டு ஒரு கிரிக்கெட் வீரரை கல்யாணம் செய்து கொள்ளப்போகிறார் என்று சூடம் கொளுத்தினார்கள்.ஒருவரது பெயரையும் குறிப்பிட்டார்கள்.
சும்மாவே சாமி ஆடுகிறவர் வரலட்சுமி.!
“சிறுபிள்ளைத்தனமான வதந்திகள்.!எனக்கு கல்யாணம் பண்ணிவைப்பதில் உங்களுக்கென்ன அவ்வளவு அக்கறை? எனக்கு கல்யாணம் என்றால் வீட்டு மாடி உச்சி மீது நின்று கொண்டு சொல்லுவேன் .நான் கல்யாணம் பண்ணிக்கொள்ளவில்லை. சினிமாவை விட்டு வெளியேறவும் இல்லை ” என்று அழுத்தம் கொடுத்து சொல்லியிருக்கிறார் வரலட்சுமி .
நீங்க எந்த வீட்டுக்கு மகா லட்சுமியோ…உங்களுக்குத்தேன் தெரியும்.!