டாப்ஸி .
சில தமிழ்ப்படங்களில் நடித்திருந்தாலும் பாலிவுட் ,டோலிவுட் இரண்டிலும் பிரபலம்.
துணிச்சலான கருத்துகளை சொல்வதாலேயே சிலரின் வெறுப்பையும் வரவில் வைத்திருப்பவர்தான் இந்த டாப்ஸி பன்னு .ஸ்டைலிஷ் பெண்.
சிலர் கூடி விருதுகள் வழங்குகிற விழாவைப் பற்றி நோகாமல் விளாசியிருக்கிறார்.
“நான் விருதுக்குத் தகுந்தவதான்னு சிலர் கூடி எடுக்கிற முடிவுகள்ல எனக்கு உடன்பாடு இல்ல!அதை ஏன் நான் ஏத்துக்கணும்.! கோப்பை அழகானதாகத் தான் இருக்கு! ஆனா அதுதான் என் கேரியரை,தகுதியை நிர்ணயிக்கிறதுங்கிறத ஒப்புக்கொள்ள முடியாது.”என்கிறார்.
இந்தப் பொண்ணு சொல்வதும் ஒரு வகையில் உண்மைதான்! சிபாரிசுகளின் பேரில் விருதுகள் வழங்குவதை பல இடங்களில் பார்க்க முடிகிறது.பணம் கொடுத்து சிலர் விருதுகளை பெறுகிறார்கள்.