திரிஷா …இது ஒரு மந்திரச்சொல்தான்.!
இந்த 37 வயதுப் பெண் தொடக்கம் முதலே நாயகியாக நடித்துக் கொண்டிருப்பவர்.
மீடியாக்கள் ஒரு காலத்தில் உயரத்தில் வைத்துக் கொண்டாடிய நடிகை.
சில முன்னணி நாளிதழ்கள், வார இதழ்கள் திரிஷாவின் அம்மா உமாவிடம் பேட்டி எடுத்துக் கொண்டு அதை திரிஷா சொன்னதாக வெளியிட்டு பெருமைப் பட்டுக்கொண்டன .அப்படி ஒரு காலம் இருந்தது.
பல முன்னணி நாயகர்களுடன் நடித்து விட்டார்.சொந்த வாழ்க்கையில் சில கசப்பான நிகழ்வுகள் ,அது அவரது சொந்த வாழ்க்கையைத் தழுவியதாக இருந்தாலும் அதைப்பற்றிய கவலை துளியும் இன்றி விலகி நடந்தவர் திரிஷா. இதற்கு அம்மா உமா முக்கிய காரணம்.
ஒரு வகையில் இப்படித்தான் வாழ வேண்டுமோ என மற்றவர்களையும் யோசிக்கவைத்தவர்தான் இந்த பெண்மணி.
பத்திரிகையாளர்களிடம் பேசுவதை விட தனது இன்ஸ்டராகிராம் வழியாக பேசுவதே பெட்டர் என நினைத்தாரோ என்னவோ….?
அதிலும் வித்தியாசம்தான்,!
“உங்களைக் காட்டிலும் 3 வயது குறைவானவராக இருக்கும் ஒருவருடன் டேட்டிங் செல்வீரா?”
“அதனாலென்ன 3 வயது குறைந்தவர் என்றாலும் சரியே!”
“உங்களது மூடநம்பிக்கை பற்றி?”
“நான் அப்படிப்பட்ட பெண் இல்லை!”
“உங்களை பற்றி மூன்று விஷயங்கள்?”
“தைரியமானவள் ,விசுவாசமானவள் ,நேர்மையானவள்”
“எதையாவது திருடியது உண்டா?”
“சில நேரங்களில் ..விளையாட்டுக்காக!”
“உங்களை மகிழ்விப்பது?”
“உணவு ,நண்பர்கள் ,திரைப்படங்கள்.”
“உங்களை பற்றி நீங்களே பெருமைப்படுவது ?”
“எந்த பிரச்னையாக இருந்தாலும் அதிலிருந்து வெளிவரக்கூடிய திறன் ”
“ஆண்களின் கவர்ச்சி?”
“கண்கள்.”
“அர்த்தத்தை உணராமலேயே ஐ லவ் யூ சொன்ன தருணங்கள் உண்டா?”
“உண்டு.சில நேரங்களில்!”