இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, ஏற்கனவே 3 முறை நீட்டிக்கப்பட்டது. தற்போது 4-வது முறையாக வரும் ஜூன் 31வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது இந்நிலையில், தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் சினிமா படப்பிடிப்பு தொடங்குவது குறித்து இதுவரைஅறிவிப்பு எதுவும்வெளியாகவில்லை.
இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக பட வாய்ப்பு இல்லாமல் பாலிவுட் நடிகர் ஒருவர் தெருவில் பழம் விற்கும் தகவல் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்தியில், ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான ‘ட்ரீம் கேர்ள்’ படத்தில் நடித்துள்ள சோலங்கி திவாகர் என்ற நடிகர் திரையுலகமே முடக்கப்பட்டு, முற்றிலும் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் தனது குடும்பத்தை காப்பாற்ற வேறு வழியில்லாமல் தெருவில் பழம் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ‘பட வாய்ப்பு இல்லாத காரணத்தால், குடும்பச் செலவு, வாடகை உள்ளிட்ட தேவைகளுக்காக வீதி,வீதியாக சைக்கிளில் பழம் விற்கும் நிலைக்கு ஆளாகியுள்ளேன்’ எனக் கூறியுள்ளார்.