கொரானாவைரஸ் …மொத்த உலகையும் முடக்கிப் போட்டுள்ள கொடிய தொற்று நோய் .இந்த நோயின் தாக்கத்தால் திரைப்படத் தொழிலே நசிந்து போகிற நிலையில் இருக்கிறது.
சிலர் ஓடிடி பிளாட்பாரம் பக்கமாக போகிறார்கள் .இன்னும் சிலர் வேறு வகைகளில் முயற்சி செய்கிறார்கள்.
திரை உலகில் மிகவும் பழுத்த அனுபவசாலி ஆர் பி சவுத்ரி. புதிய இயக்குநர்களை தமிழ்த் திரைக்கு அறிமுகப்படுத்தியவர்களில் முதன்மையானவர். இவரும் பைனான்சியர்கள்கள் சங்கம் ,தியேட்டர் அதிபர்கள் சங்கம் ஆகியவற்றின் முதன்மையான திருப்பூர் சுப்ரமணியமும் சேர்ந்து புதிய முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள்.
2 கோடி பட்ஜெட். 30 நாளில் படப்பிடிப்பு .30 நாளில் போஸ்ட் புரடக்சன்ஸ் வேலைகள் .ஆக 60 நாளில் ஒரு படம் தயாராகிவிடுகிறது. இந்த படத்தில் நடிப்பவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் எதுவும் இல்லை.
ஆனால் படத்தின் வியாபாரத்தைப் பொறுத்து சம்பளம் கொடுக்கப்படும்.
இப்படியொரு திட்டத்தின் கீழ் ஒரு படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் தயாரிக்கப் போ கிறார்கள் .படத்தின் நாயகன் சத்யராஜ். நாயகி மற்ற நடிக நடிகையர் இன்னும் முடிவாகவில்லை. வணிக நோக்குடன் படம் அமைய வேண்டும் என்றால் விஜயசேதுபதி ,பார்த்திபன் போன்றவர்கள் படத்தில் இடம் பெற வேண்டும் என சிலர் நினைக்கிறார்கள் அவர்களுடனும் பேச்சு நடக்கிறது.
இந்த திட்டம் வெற்றி பெற்றால் படங்களின் வியாபார அடிப்படையில்தான் நடிக நடிகையர்க்கு சம்பளம் என்பது உறுதி செய்யப்படும். முயற்சி வெற்றி பெறுமா? கோடிகளில் சம்பளம் வாங்குகிறவர்கள் சில லட்சங்களை வாங்குவதற்கு சம்மதிப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.