இந்தியன் 2 படப்பிடிப்புத் தொடங்குமா என்கிற சந்தேகம் இண்டஸ்ட்ரியில் பல பேருக்கு இருந்தது. பலவித இடையூறுகளை ,உயிரிழப்புகளை சந்தித்ததால் இந்தியனே தொடராது என்று சொன்னார்கள். ஆனால் படப்பிடிப்புத் தளம் மாறி வேலைகள் நடக்கவிருக்கின்றன.
பூந்தமல்லி ஈவிபி படப்பிடிப்பு அரங்கம் பல விபத்துகளை சந்தித்திருக்கிற இடம். என்றாலும் நகருக்கு வெளியில் இருப்பதால் சில சவுகரியங்கள் இருந்தன. தற்போது இந்த இடத்திலிருந்து மாறி பின்னி மில்லுக்கு சென்று விட்டார்கள்.அங்குதான் அரங்குகள் அமைக்கிற வேலைகள் நடக்கின்றன.
இந்தியன் 2 வை தொடர்ந்து ‘தலைவன் இருக்கின்றான் ‘பட வேலைகளும் தொடங்கும் என தெரிகிறது. ராஜ்கமல் ,லைகா இணைந்து இந்த படத்தைத் தயாரிக்கின்றன. தேவர் மகனின் இரண்டாம் பாகமான அந்த படத்தில் நாசருக்கு மகனாக விஜய்சேதுபதி நடிக்கிறார் என்கிறார்கள்.
அதாவது கமலுக்கு வில்லனாக நடிக்கிறாராம். பூஜாகுமார் முக்கிய வேடத்தில். இஞ்சி இடுப்பழகி ரேவதியும் படத்தில் நடிக்கிறார் என்கிறார்கள்.கமலின் மனைவியாக நடிக்கிறாராம்