தமிழில் ஷங்கரின் ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஜெனிலியா, விஜய்யுடன் ‘சச்சின்’, ‘வேலாயுதம்’, தனுஷுடன் ‘உத்தம புத்திரன்’, ஜெயம் ரவியுடன் ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ என தனது குறும்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர் ,தெலுங்குப்படங்களில் நடித்திருக்கிறார் .
பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு ,கணவர், குழந்தைகள் குடும்பம் என வாழ்ந்து வருகிறார்.
மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில்வெளியாகி வரவேற்பை பெற்ற ‘லூசிஃபர்’, படம் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க நடிகை ஜெனிலியாவை தயாரிப்பு தரப்பு அனுகியதாக தகவல் பரவியது. இது குறித்து ஜெனிலியா தரப்பில் விசாரித்தபோது, மீண்டும் சினிமாவில் நடிக்கும் திட்டம் எதுவும் அவரிடம் இல்லை என்கிறார்கள்