ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு., பாக்கியராஜ் கண்ணன் இயக்கம் , கார்த்தி,ராஷ்மிகா மந்தனா ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம்தான் ’சுல்தான்’.
கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப் பட்டுள்ளது., ’சுல்தான்’ திரைப்படத்தின் பணிகள் இன்னும் அதிகம் பாக்கியிருப்பதால் இந்த படம் 2021ஆம் ஆண்டு கோடை விடுமுறையில்தான் வெளிவரும் என்றும், ‘காஷ்மோரா’ போன்று இந்த படமும் ஃபேண்டஸி படம் என்றும் இந்த படத்தில் இருந்து அனிருத் விலகிவிட்டதால், விவேக் மெர்வின் புதிய இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இது உண்மையா ?
“இந்த தகவல்கள் எல்லாமே உண்மையில்லை” என்பதாக ‘சுல்தான்’படத் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.