நீலக்கடல்…ஆர்ப்பரிக்கிற அலைகள் இல்லை. மயக்கும் மாலைப்பொழுது.!
மங்கையின் பெயர் ஹன்சிகா. கையில் ஏந்தி இருப்பது மதுக் கிண்ணம்.
கிண்ணத்தில் இருப்பது சரக்கா ?சர்பத்தா?
நடிகை சொன்னால்தான் தெரியும்.
மாலத்தீவில் எடுக்கப்பட்ட படத்தை தன்னுடைய இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில், போட்டிருக்கிறார். போட்டியிட்டுக்கொண்டு ரசிகர்கள் பார்க்கிறார்கள். ஹன்சிகாவின் 50 ஆவது படம் மகா . படத்தின் முதல் போஸ்டர் சர்ச்சைக்குள் சிக்கி நீதி மன்றம் வரைசென்றது. இன்னும் வெளியாகவில்லை.
இந்தப்படத்தில் எஸ்.டி .ஆர் .கவுரவ வேடத்தில் பைலட்டாக நடித்திருக்கிறார். இருவரது பிரேக் அப் புக்குப் பின் இணைந்து நடித்திருக்கிற படம்தான் மகா.
இயக்குநர்கள் ஹரி சங்கர் ,ஹரி நாராயணன் இணைந்து இயக்குகிற புத்தி என்கிற படத்திலும் ஹன்சிகா இருக்கிறார். ஊரடங்கு ஒழிந்தபிறகு படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பமாகும் என்கிறார்கள்