ஸ்டெர்லைட் நச்சுஆலையை மூடச்சொல்லி தூத்துக்குடி மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் பயங்கரமாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள் .மக்களை அடித்து நொறுக்கினார்கள். மே 22, 23 ஆகிய இருநாட்களை தூத்துக்குடி மக்கள் மட்டுமல்ல தமிழக மக்களும் மறக்க மாட்டார்கள் .இந்த போராட்டம் பற்றி ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷனில் நடிகர் ரஜினிகாந்த் வாக்குமூலம் அளிக்கும்படி கமிஷன் கேட்டிருந்தது. வக்கீல் வழியாக பதில் சொல்லியிருந்தார் ரஜினிகாந்த். மக்களை சுட்டுக்கொன்ற இந்த நாளினை மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் நினைவு கூர்ந்து இருக்கிறார் .
“மக்களின் குரலுக்கு செவி சாய்க்காமல், போர் குற்றவாளிகளைப் போல் சொந்த அரசே எம் மக்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்ற தினம் இன்று.
சுவாசிக்க நல்ல காற்றைக் கேட்டவர்களின் மூச்சையே பறித்து, முதலாளியின் வருமானத்தை காக்க, அரசு தன் மானத்தை அடகு வைத்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆகிறது.”