தென்மேற்குப் பருவக்காற்று படத்துக்குப் பிறகு விஜய்சேதுபதி -இயக்குநர் சீனுராமசாமி கூட்டணி சேர்ந்த படம்தான் ‘இடம் பொருள் ஏவல் ‘
இந்த படத்தில் விஜய்சேதுபதியுடன் விஷ்ணு விஷால் ,மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ,நந்திதா ஆகியோர் நடித்திருக்கிறார்கள் .யுவனின் இசைக்கு வைரமுத்து பாடல்களை எழுதி இருக்கிறார்.பாடல்கள் வெளியாகி ஆண்டுகளும் கடந்து விட்டன.ஆனால் படம் மட்டும் வெளியாகவில்லை.
தயாரிப்பாளர் லிங்குசாமிக்கு ஏற்பட்ட பிரச்னைகளினால் இந்தப்படத்தின் வெளியீடு தள்ளிக்க்க்க்க்க்கொண்டே போனது. இயக்குநர் சீனுராமசாமி ஒரு கட்டத்தில் தன்னுடைய சில உரிமைகளையும் விட்டுக் கொடுத்து வெளியேறி விட்டார். ஆண்டுகள் பல கடந்து விட்டாலும் தற்போது அந்த படத்துக்கு வழி கிடைத்திருப்பதாக தெரிகிறது.கொரானா ஊரடங்குக்குப் பிறகு தியேட்டர் அதிபர்களுடன் பேசி படத்தை வெளியிடுவார்கள் என்று தெரிகிறது.
இதனால் இயக்குநர் சீனு ராமசாமிக்கு சற்றே சந்தோசம்.! டிவிட்டரில் தனது கருத்துகளை பதிவு செய்திருக்கிறார்.
சூதர்மனைதனில் உருவப்படும் சேலையை பற்றாமல் தன் இரண்டு கைகளையும் உயர்த்திக் “கிருஷ்ணா கிருஷ்ணா” எனப் பதறிய திரவுபதியின் மனநிலையில் சிக்குண்ட எமக்கு ஆறுதல்.இது திரைப்படந்தான் ஆனால் எனக்கு பிள்ளை, இயக்குநர் திரு,லிங்குசாமிக்கு நன்றி #இடம்பொருள்ஏவல் வெளியீடு