பேட்ட படத்தின் மூலமாக தமிழுக்கு வந்தவர் மாளவிகா மோகனன். ரஜினியுடன் நடித்தவர் தற்போது மாஸ்டர் படத்தின் வழியாக விஜய்யுடனும் நடித்து விட்டார்.
தொடக்கமே அதகளம் பரப்புகின்ற வசூல் ராஜாக்களின் படங்களாக அமைந்து விட்டன.
தற்போது ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் மாளவிகா மோகனன் தன்னுடைய சமூக வலைத்தளம் வழியாக அவரது ரசிகர்களுடன் பேசினார். அவர்களது கேள்விகளுக்கு பதிலும் சொன்னார்
மாஸ்டர் படத்தின் அனுபவம் என்ன?
“ரஜினி,விஜய் ஆகிய பெரிய நடிகர்களுடன் நடிப்பேன் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை.. அதுவும் ஆரம்ப படங்களில் என்றால்.? மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
மாஸ்டர் படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கில் ஒரே நெர்வஸாக இருந்தது. விஜய் சார் தான் ஊக்கம் கொடுத்து நடிக்க வைத்தார் .அந்த ஷாட் நன்றாக வந்திருப்பதாக அவரே சொன்னார்.
ஆரம்பத்தில் நான் புதுமுகம் என்பதாலோ என்னவோ என்னுடன் அவ்வளவாக பேசமாட்டார். ஆனால் பழகப் பழக ரொம்பவும் ஜாலியானவர் என்பது தெரிந்தது. ஷாட் முடிந்ததும் அவரது கேரவனுக்கு போகமாட்டார். எங்களுடன் அமர்ந்து பேசுவார் .நிறைய ஜோக் சொல்லுவார். அடுத்தவர்களை பற்றி தவறாக பேச மாட்டார்.இனிமையானவர் .நெகட்டிவா பேசி நான் கேட்டதில்லை” என்கிறார் மாளவிகா மோகனன்