கவுதம்மேனனின்இயக்கத்தில் சிம்பு,திரிஷா நடிப்பில் வெளியான ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படத்தை கடந்த 2 நாட்களாக யூடியூப்பில் இதுவரை 10 லட்சம் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர். அதே சமயம் நெட்டிசன்களால் தாறுமாறாக கிண்டலடிக்கப்பட்டும் வருகிறது.
இக்குறும்படத்தை பார்த்த பலரும் கவுதம்மேனனின் வலைதளப்பக்கத்தில்,,’என்ன சார்,’கார்த்திக் டயல் செய்த எண்’அழகான காதலா இருக்கும்னு பார்த்தா ‘கள்ளக்காதலா’ இருக்கு. என இஷ்டத்துக்கும் கலாய்த்து வருகின்றனர்.
அதேபோல் காமெடி நடிகர் யோகிபாபு பெயரில் வெளியாகியுள்ள டுவிட்டர் கணக்கில் செந்தில் தன்னுடைய பழைய காதலிக்கு போன் செய்து, ‘ஹலோ காமாட்சி’ என பேசுவது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.
குறும்படத்தில், கணவன் மற்றும் 2 குழந்தைகளின் தாயான திரிஷாவிடம் சிம்பு,மீண்டும் தன் பழைய காதலைச்சொல்லி,எனக்கு நீ வேணும் ஜெஸ்சி எனக் கேட்பது போன்றும் , சிம்புவை சமாதானப்படுத்த அவரிடம், ‘ஐ லவ் யூ’ என கூறும் திரிஷா, நீ எனக்கு மூன்றாவது குழந்தை மாதிரி என்றும் கூறுவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.இதை வைத்து நெட்டிசன்கள் சிம்புவையும் கவுதம்மேனனையும் விதவிதமாக கலாய்த்து வருகின்றனர்.