தற்போதெல்லாம் எடிட்டர்களும் செய்திகளை கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
இயக்குநர்கள் கிராக்கி பண்ணிக்கொண்டு “அதெல்லாம் சீக்ரெட் பிரதர்’ என்று ஒன்றும் சொல்லாமல் நழுவுவார்கள்.
“உனக்கெல்லாம் நியூஸ் சொல்லி அதை நீ எழுதி பப்ளிசிட்டி பண்ணி என் படம் ஓடணும்கிற அவசியம் இல்ல “என்கிற தெனாவட்டு சில இயக்குநர்களுக்கு இருக்கும் . இதனால் பலரை இக்னோர் செய்து விடுவார்கள் . இந்த கடுப்பினால்தான் சில காட்டமான செய்திகளை அந்த செய்தியாளர்கள் தேடிப்பிடித்து வெளியிட்டு விடுவார்கள். அந்த இயக்குநர்கள் அதன் பின்னர் முதல் செய்தியை அவர்களுக்குத்தான் சொல்லுவார்கள்.
நடிகை நயன்தாராவின் கைகளில் நான்கு பெரிய படங்கள் இருக்கின்றன.
ரஜினியுடன் அண்ணாத்தே ,விஜய்சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல் ,விக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நெற்றிக்கண் ஆகிய மூன்று படங்கள்தான் முழு வீச்சில் கிளம்பிய படங்கள். மூக்குத்தி அம்மன் வேற லெவல் படம்.
இந்தப்படங்களை கொரானா இழுத்துப் பிடித்து வைத்து இருக்கிறது.
நெற்றிக்கண் படத்துக்கு இயக்குநர் மிலிந்த்ராவ் .
” நெற்றிக்கண் படம் இண்ட்ரஸ்டிங்கான திரில்லர் மூவி. சீட்டின் நுனிக்கு வந்துவிடுவார்கள் ரசிகர்கள். அந்த அளவுக்கு படத்தில் சீன்கள் இருக்கின்றன” என்கிறார் படத்தின் எடிட்டர் லாரன்ஸ் கிஷோர்.
உண்மையிலேயே படத்தின் வெற்றி தோல்வியை ஊகிக்கும் திறன் எடிட்டர்களுக்குத்தான் இருக்கிறது.
அவர்கள் சொன்னால் சரியாகவே இருக்கும்.
“நெற்றிக்கண் படத்தில் அதிரடி நிறைந்த பல ஆக்சன் காட்சிகள் இருக்கின்றன, 60 சதவீத படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது., தற்போது லாக்டவுன் தளர்வு காரணமாக இப்படத்தின் எடிட்டிங் பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது , இந்த படத்தில் நயன்தாராவின் வேறலெவல் அதிரடியை ரசிகர்கள் கண்டு மிரள்வார்கள் “என்கிறார் லாரன்ஸ்
பிரபல ஆக்சன் ஹீரோக்களே மிரண்டு போகும் அளவுக்கு இதில் நயன்தாராவின் ஆக்சன் காட்சிகள் இருக்கவேண்டும் என்கிற நிபந்தனையுடன் தான் விக்னேஷ் சிவன் இப்படத்தின் தயாரிப்பை ஏற்றிருக்கிறார் என்கிறார்கள்
கொரியன் படமான பிளைண்ட் படத்தின் ரீமேக் தான் நெற்றிக்கண் என்றும், பார்வையற்ற நாயகி நயன்தாரா, தனக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக எப்படி போராடி எதிரிகளை பழிவாங்குகிறார் என்பதே நெற்றிக்கண் படத்தின் கதையாக இருக்கும் என்கிறார்கள்.