நடிகர் ராகவாலாரன்ஸின் சுவரொட்டிப் படத்துக்கு வறுமையின் சின்னமாக காட்சி அளிக்கும் ஒரு சிறுவன் முத்தமிட்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வந்தது. பெரிய பெரிய நடிகர்களுக்கு ரசிகர்களாக இருக்கிற காலத்தில் இந்த அறியப் படாத சிறுவன் தன்னுடைய படத்துக்கு முத்தமிட்டு சந்தோசம் அடைகிறான் என்றால் அதை விட பேரின்பம் வேறு ஏது ?
நடிகர் லாரன்சுக்கு மனசுக்குள் ஒரு உந்துதல் .எதோ ஒன்று அவரை இனம் புரியாத மகிழ்ச்சியில் தள்ளியது. அந்த சிறுவனைப் பார்க்க வேண்டும் என்கிற ஆசை.
“எனக்கு பெரிய அவார்டு கிடைத்த உணர்வை அந்தப்படம் ஏற்படுத்தியது.” என்று தனது டிவிட்டரில் பதிவு செய்திருந்த அவர் தன்னுடைய ரசிகர் மன்றங்கள் வழியாக அந்த சிறுவனை கண்டு பிடிக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தார்.
கடைசியில் எம் சுதாகர் ,சங்கர் என்கிற ரசிகர் மன்றத்து பிரமுகர்கள் கண்டு பிடித்து ராகவா லாரன்சுக்கு தகவல் கொடுத்தனர்.
”இந்த சிறுவனை பார்க்கும் போது சிறு வயதில் என்னை பார்த்தது போல இருக்கிறது. நானும் இதுபோல் தான் கஷ்டமான சூழலில் வளர்ந்தேன். இந்த சிறுவனைநேரில் காண ஆவலாக உள்ளேன். இவனுக்கு ஏதாவது ஸ்பெஷலாக செய்ய வேண்டும்” என பதிவிட்டுள்ளார். லாரன்ஸின் இந்த பதிவு அவரது ரசிகர்கள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரானா ஊரடங்கு காரணமாக தற்போது அந்த சிறுவனை சென்னைக்கு அழைத்து வர இயலவில்லை.