விருமாண்டி இயக்கத்தில்,விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் க/பெ.ரண சிங்கம்.
இத்திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், பூ ராமு, ஆகியோரும் நடித்திருக்கிறார்கள் கிராமத்து மக்களின் தண்ணீர் பிரச்சினையை மிகவும் அழுத்தமுடன் சொல்லியிருக்கிற இந்த திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
க/பெ.ரண சிங்கம் படத்தின் மூலம் நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஶ்ரீ அறிமுகமாகியுள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் மற்றும் அவரது மனைவி சைந்தவி இருவரும் தங்களது ட்விட்டரில் , பவானி ஶ்ரீக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.