கொரானா தொற்று நோய் துயரிலும் துணிந்து செயலாற்றுபவர்களில் சூர்யாவும் ஒருவர்.
கொரானா ஊரடங்கு முற்றிலும் ஒழிக்கப்பட்ட பிறகு அவரது இரண்டு பிரமாண்ட பெரிய படங்களின் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கிவிடும்.
இயக்குநர் ஹரியின் ‘அருவா’ ,வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ஆகிய படங்களைத் தொடர்ந்து சொந்தமாக தயாரிக்கிற படமும் இருக்கிறது.
த .ச ஞானவேல் அறிமுக இயக்குநரின் படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்கிறார்.அந்த படத்தை சூர்யாவே தயாரிக்கிறார் .
தன்னுடைய மனைவி ஜோதிகா நடித்திருக்கிற ‘பொன் மகள் வந்தாள்’ என்கிற படத்தை அமேசன் பிரைம் வீடியோவில் துணிந்து வெளியிட்டு துணிகர சாதனையையும் செய்திருக்கிறார்.
அவர்தான் அண்மையில் ஒரு விபத்தில் சிக்கியிருக்கிறார். இடது கையில் காயம். குணமடைந்து வருகிறார். இதற்காக அவரது ரசிகர்கள் சோசியல் மீடியாக்களில் நலம் பெற வாழ்த்து செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள்.