வாணி ஸ்ரீ அற்புதமான நடிகை.
தெலுங்கு நடிகையாக இருந்தாலும் ஒரு தமிழரை கல்யாணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறவர்.
இவர் வாணி-ராணியில் நடித்தபோது 26 வயதுதான்.! அழகாக புடவை கட்டுகிறவர் .
“எப்படி உன்னால் இவ்வளவு அழகாக புடவை கட்ட முடிகிறது?” என்று ஒருதடவை வாணிஸ்ரீயிடம் நேரிலேயே கேட்டு விட்டார் சிவாஜி கணேசன். அன்றுதான் கண்ணுக்கு எப்படி மை இடுவது என்பதையும் அவருக்கு கற்றுக்கொடுத்தார்.
நாடகங்களில் ஸ்திரிபார்ட் வேஷம் கட்டும்போது சிவாஜி தன் கண்களுக்கு எப்படி மையிட்டுக் கொண்டார் என்பதை செய்து காட்டினார். இதன் பிறகே கண்களுக்கு மை இடுவதில் தனிக்கவனம் செலுத்தத் தொடங்கினார் வாணிஸ்ரீ.
சரி அந்த கதை எல்லாம் இப்போது எதற்கு?
வாணிஸ்ரீயை பற்றி எழுதுகிற நேரத்தில் பழைய நினைவுகளில் சில எட்டிப்பார்த்தது. அவ்வளவுதான் .இனி பிரச்னைக்கு வரலாம்.
வாணி ஸ்ரீ -டாக்டர் கருணாகரன் தம்பதியருக்கு வெங்கடேஷ் கார்த்தி ,அனுபமா என பிள்ளைகள். இவர்கள் இருவருமே டாக்டர்கள். வெங்கடேஷ் கார்த்திதான் அண்மையில் தற்கொலை செய்து கொண்டார். இவர் சென்னையில் இருக்கிற அம்மாவின் வீட்டுக்கு வருவதில்லையாம்.அப்பாவின் பூர்விக வீட்டுக்குத்தான் வந்து போவது வழக்கம் என்கிறார்கள்.
அவர் தற்கொலை செய்யவில்லை .மாரடைப்பு காரணமாக இறந்து விட்டார் என்பது வாணி ஸ்ரீ தரப்பு தற்போது சொன்னாலும் முதலில் வந்த செய்தி தற்கொலை செய்து கொண்டார் என்பதுதான்.
வெங்கடேஷ் மருத்துவம் படிக்கிறபோதே படுகா இனத்தை சேர்ந்த வீணா என்கிற சக மாணவியை உண்மையாக காதலித்திருக்கிறார். இது வாணி ஸ்ரீ க்கு பிடிக்கவில்லை. இதனால் மகன் மீது அம்மாவுக்கு அப்போதே கசப்பு இருந்தது.இதுதான் நாளடைவில் வளர்ந்து எதிர்ப்பை சம்பாதித்தது என்கிறார்கள்.
ஆனாலும் அப்பாவின் ஆதரவு மகனுக்குத்தான் இருந்ததாம். வெங்கடேஷ் -வீணா திருமணத்துக்குப் பின்னர் வாழ்க்கை எந்த வித முட்டலுமில்லாமல் அமைதியாக சென்றதற்கு அப்பாதான் காரணமாக இருந்திருக்கிறார்,
மருமகள் டாக்டர் வீணாவுக்கு சென்னை ராமச்சந்திராவில் வேலை வாங்கியதே மாமனாரின் செல்வாக்குதான் என்கிறார்கள் .
மகனுக்கு இரண்டு பிள்ளைகள். இந்த பிள்ளைகள் தங்களது சொத்தில் பங்கு கேட்டு வந்து விடக்கூடாது என்பதற்காக வாணிஸ்ரீ தரப்பில் வழக்குப்போடப்போவதாக சொல்கிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.