பரியேறும் பெருமாள் ,இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு ஆகிய இரண்டு படங்களையும் தயாரித்தது இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் . இந்த நிறுவனம் தனது மூன்றாவது தயாரிப்பை தொடங்க இருக்கிறது.
படத்தின் நாயகன் யோகிபாபுவாக இருக்கலாம் .
கதையைக் கேட்ட யோகிபாபுவுக்கு அவருடைய கேரக்டர் மிகவும் பிடித்து விட்டதாம். லாக் டவுன் முடிந்ததும் ஷூட்டிங் வைத்தால் உடனே கலந்து கொள்கிறேன் என்று அவர் சொன்னதாக சொல்கிறார்கள்.
ஆனால் படத்தின் ஏனைய கேரக்டர்களில் யாரை நடிக்க வைப்பதுஎன்பது இன்னமும் பரிசீலனையில் இருப்பதாக சொல்கிறார்கள்.
புதுமுக இயக்குநர் ஷான் இப்படத்தை இயக்குகிறார்.
ஒரு குழந்தையை மையப்படுத்தி உணர்வுப் பூர்வமான கதையாக உருவாகியுள்ள இக்கதையின் நாயகன் யோகிபாபு என்பது முடிவாகி இருக்கிறது.
தற்போது குழந்தை நட்சத்திரம் மற்றும் நடிகர்,நடிகையர் தேர்வு நடந்து வருவதாகவும், ஜூன் மாத தொடக்கத்தில் இப்படத்தின் தலைப்பு மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் விபரம் வெளியாகும் எனத்தெரிகிறது.