மீ டூ பிரச்னை பற்றி ஆளுக்காள் குற்றம் சொல்வது வழக்கமாகிவிட்டது.
இதை ஒரு விளம்பரப்படுத்தலாக நினைத்துக் கொள்கிறார்களோ என்னவோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
பாலிவுட்டில் தனுஸ்ரீ தத்தா, டோலிவுட்டில் ஸ்ரீரெட்டி, பாடகி சின்மயி உள்பட பல நடிகைகள் இப்பட்டியலில் அடக்கம்.
இந்த லாக்டவுன் நேரத்தில் கூட,கடந்த சில் நாட்களுக்கு முன் நடிகை காஷ்மிரா ஷா,மற்றும் ஐஸ்வர்யாராஜேஷ் ஆகியோர் தங்களது மீ டூ அனுபவம் குறித்து கூறியிருந்தனர்.
தற்போது நடிகை, நந்தினி ராய் ‘மீ டூ’ அனுபவம் குறித்து பேசி இருக்கிறார். தெலுங்கில் பிரபலம், மீடூ சினிமாவில் மட்டுமில்லை பல இடங்களில் இருக்கிறது என்கிறார்.அவர் சொல்வதையும் கேட்போமே!
“வாய்ப்புக்காகப் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமாவில் மட்டுமல்ல, எல்லா துறையிலும் இருக்கிறது. இருந்தாலும் பெண்ணின் பதிலை பொருத்தே அது நடக்கிறது.
எந்த பெண்ணும் நோ என்று மறுத்துவிட்டால், யாரும் எதுவும் செய்ய முடியாது. நான் அது போன்ற எந்த அநாகரிகமான பிரச்னைகளை ஒரு போதும் எதிர்கொண்டதில்லை
கேள்விபட்டிரு
இது மருத்துவம், தொழில்நுட்பத்துறை, காவல்துறை போன்ற பல துறைகளில் இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.
இவர் தமிழில் கிரகணம் என்ற படத்தில் நடித்துள்ளார்.தெலுங்கில், லாகின், மாயா, சில்லி பெல்லோஸ், சிவரஞ்சனி உட்பட சில படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் குட்பை டிசம்பர் என்ற படத்திலும் கன்னடத்தில் குஷி குஷியாகி என்ற படத்திலும் நடித்துள்ளார்.