சந்திரமுகி 2 அறிவிப்பு வெளியாகிவிட்டாலும் அடுத்த அறிவிப்புகள் இன்னும் வரவில்லை. லாக்டவுன் இருப்பதால் அதைப்பற்றி பேசத் தயங்குகிறார்கள்.
ஆனாலும் வழக்கம்போல யூகங்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன.
இந்த யூகங்கள் சில நேரங்களில் உண்மையாவதும் உண்டு,சில நேரங்களில் பிழையாவதும் உண்டு.
சந்திரமுகியில் ரஜினிகாந்த் ஏற்றிருந்த வேடத்தை சந்திரமுகி 2-ல் ராகவாலாரன்ஸ் ஏற்கவிருக்கிறார் என்பதை மட்டுமே சரியாக ஊகிக்க முடிகிறது.
லாக்டவுன் இருப்பதால் யாரையும் நேரில் சந்திக்க முடியவில்லை என்பதாக இயக்குநர் பி.வாசுவும் தெரிவித்திருக்கிறார்.
ஆனாலும் ஜோதிகாவின் வேடத்தை நடிகை சிம்ரன் ஏற்கலாம் என்கிற ஊகம் அதிகமாக இருக்கிறது.
இது தொடர்பாக பிரபல பெண்கள் பத்திரிகையில் பேசிய நடிகை சிம்ரன் அந்த ஊகத்தை தவறு என்பதாக சொல்லியிருக்கிறார்.
“இந்த வதந்தி எங்கேயிருந்து கிளம்பியது என்பது தெரியவில்லை. சந்திரமுகி 2 பற்றி இதுவரை யாரும் என்னுடன் பேசவில்லை.”என்கிறார் சிம்ரன்.
15 ஆண்டுகளுக்கு முன்னர் தயாரான சந்திரமுகியில் ஜோதிகாவின் வேடத்தில் சிம்ரன்தான் நடித்தார்.சில காட்சிகளில் நடித்த பின்னர் தீபக் பகாவுடன் திருமணம் நடந்தது. தொடர்ந்து கர்ப்பவதி ஆனார்.அதனால் அந்த படத்தில் சிம்ரன் நடிக்க முடியாமல் போய் விட்டது.
ஆனால் நடிப்பதையும் நடனம் ஆடுவதையும் சிம்ரனால் விட முடியவில்லை. இதை அவரே பல இடங்களில் சொல்லியிருக்கிறார்.