ஸ்ட்ரீமிங் தளங்களில் பல முதல் முயற்சிகளை முன்னெடுத்து வரும் அமேசான் ப்ரைம், அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் ‘பொன்மகள் வந்தாள்’ தமிழ் திரைப்படத்தின் ட்ரெய்லரை பிரம்மாண்டமான முறையில் வெளியிட்டுள்ளது.
தென்னிந்திய சந்தையில் இருக்கும் எண்ணற்ற ரசிகர்களிடம் சென்று சேர, தமிழ் சினிமாவின் முதல் ஸ்ட்ரீமிங் வெளியீடாக வெளிவரவுள்ள இந்தத் திரைப்படத்தின் ட்ரெய்லர் 21 மே, இரவு 8.43 மணிக்கு, 31 தொலைக்காட்சி சேனல்களில் ஒரே நேரத்தில் ஒளிபரப்பானது.
இதுவரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான ட்ரெய்லர் விளம்பரங்களில் மிகப்பிரம்மாண்டமான விளம்பரமாக இது கருதப்படுகிறது.
தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில், ஒரே நேரத்தில், கிட்டத்தட்ட 1.4 கோடி மக்களை * இந்த ட்ரெய்லர் சென்று சேர்ந்துள்ளது. தென்னிந்தியாவில் பிரபலமான, முக்கிய நடிகைகளில் ஒருவரான ஜோதிகா நடித்துள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் சன் டிவி, கே டிவி, ஸ்டார் விஜய் டிவி, சன் நியூஸ், சிஎன்என் நியூஸ் 18 தமிழ், ஜீ தமிழ் உட்பட முக்கிய தொலைக்காட்சி சேனல்கள் அனைத்திலும் இந்த ட்ரெய்லர் ஒளிபரப்பானது. இதோடு சேர்த்து, ‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் ட்ரெய்லருக்கு, அமேசான் ப்ரைம் வீடியோவின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்திலும் ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. 24 மணி நேரத்தில் 60 லட்சம் பார்வைகளை ட்ரெய்லர் பெற்றுள்ளது.
(*பார்க் தரவுகளை வைத்து மதிப்பிடப்பட்ட சராசரி பார்வையாளர்களின் அடிப்படையில்)