நடிகைகளின் சமூக வலை தளங்களை சிலர் முடக்கி விட்டு அவர்களே செய்திகளை கையாளுவார்கள். இந்த போலி வலை தளங்களை நம்பி நடிகைகளின் ரசிகர்கள் ஏமாறுவது வழக்கமாகி இருக்கிறது.
சமூக வலை தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் நடிகை பூஜா ஹெக்டே.
அவருக்கு பத்து மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்கள் உள்ளனர்.
இவரது இன்ஸ்டாகிராம் கணக்கு மர்ம நபர்களால் முடக்கப்பட்டு விட்டதாக பூஜா ஹெக்டே கூறியுள்ளார்.
இதுகுறித்து தனது டுவிட்டரில், ‘எனது இன்ஸ்டாகிராம் கணக்கை சிலர் முடக்கியுள்ளனர். எனது டிஜிட்டல் டீம் அதை மீட்க உதவி வருகிறது. அதில் இருந்து வரும் எந்த அழைப்பையும் ஏற்கவேண்டாம். அந்த கணக்கில் இருந்து கேட்பவருக்கு எந்த தனிப்பட்ட தகவலையும் அனுப்ப வேண்டாம்” என்றும் பதிவிட்டுள்ளார்..
நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்களின் சமூக வலைத்தளக் கணக்குகளை குறிவைத்து அதை முடக்கும் வேலைகளில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்
சமீபத்தில் அபர்ணா பாலமுரளி, இந்தி நடிகை ஊர்வசி ரவ்தேலா, நடிகை ஷோபனா உள்ளிட்டோரின் கணக்குகள் மர்ம நபர்களால் முடக்கப்பட்ட நிலையில், இப்போது பூஜா ஹெக்டே கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.
பூஜா ஹெக்டே தற்போது, பீரியட் படமாக தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் பிரபாஸ் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தில், கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இப்படத்தை கே.கே. ராதாகிருஷ்ணா இயக்கி வருகிறார்.இந்தியில் சல்மான்கான் ஜோடியாக, ‘கபி ஈத் கபி தீவாளி’ என்ற படத்தில் நடிக்கிறார். தமிழில் சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாகவும் கூறுகிறார்.