
சாத்தியம் ஆகுமா என்பது தெரியவில்லை. ஆனால் செய்தி என்னவோ பரவிக்கிடக்கிறது.
பொன்னியின் செல்வன் என்கிற அமர காவியத்தை எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பல பிரபலங்கள் திரைப்படமாக கொண்டுவர முயன்றனர்.அவர்களால் முடியவில்லை.
ஆனால் இயக்குநர் மணிரத்னம் லைகாவுடன் இணைந்து ஒரு கட்ட படப்பிடிப்பை முடித்திருக்கிறார். இந்த காவியத்தை இரு பாகமாக கொண்டு வரப்போவதாக அறிவித்திருக்கிறார்.
இந்த தருணத்தில்தான் கொரானா கொள்ளை நோய் பரவி உலகை மொத்தமாக முடக்கிப்போட்டு விட்டது.
2019 இல் தொடங்கப்பட்ட இப்படத்தில், விக்ரம், கார்த்தி, சரத்குமார் ,ஜெயம் ரவி, பிரபு, ஜெயராம், , ஐஸ்வர்யா ராய் பச்சன், திரிஷா, ஐஸ்வர்யா லெட்சுமி என இந்தியத் திரையுலக நட்சத்திரங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்
இப்படத்தின் முதல் பகுதியை , இந்த ஆண்டு இறுதிக்குள் முடித்து வெளியிட மணிரத்னம் திட்டமிட்டு இருந்தார். ஆனால் எதிர்பாரா விதமாக கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக காலவரையின்றி ஒட்டுமொத்தமாக சினிமா படப்பிடிப்பு முடக்கப்பட்டுவிட்டது.
மேலும் லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, 50க்கும் குறைந்த நடிகர்களின் எண்ணிக்கையில் மீண்டும் படப்பிடிப்பு நடத்தப்படும் சூழல் உருவானாலும் கூட, வரலாற்று படமான இப்படத்தின் படப்பிடிப்புக்கு குறைந்தது 100 நடிகர்களாவது தேவை என்பதால்,எப்படியும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை நடத்த கிட்டத்தட்ட 6 மாதங்களாவது ஆகும் என்கிற நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், எப்படியும் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் மிகவும் குறைந்த நபர்களுடன் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைத்துவிடும் எனக் கூறப்படுவதால்,கிடைத்த இடைவெளியில் மணிரத்னம் குறுகிய கால தயாரிப்பாக ஒரு அழகான காதல் கதையை படமாக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ஒரு முதிர்ந்த காதல் கதையாக இருக்கும் என்றும்,இப்படத்தில் மணி ரத்னத்துடன் ஏற்கனவே 5 படங்களில் இணைந்து பணியாற்றிய அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.
இது எந்த அளவுக்கு முடியும் என்பது தெரியவில்லை.












