அட்டு பையன் லட்டு பொண்ணு – இது தான் இப்படத்தின் ஒரு வரி கவிதை. “போஸ்பாண்டி” – திரைப்படத்தின் கதை . இயக்குனர் ராஜா சுப்பையாவால் எழுதப்பட்டது. பிறகு நயன்தாராவை போல் ஒரு நாயகிக்காக காத்து இருந்த பொழுது, நேஹா காயத்ரியை கண்டு பிடித்து இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளனர். நாயகன் வேடத்தை இயக்குனர் ராஜா சுப்பையாவே ஏற்று நடித்துள்ளார். இந்தப்படம் பண்டூன் டாக்கீஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது.
ஒரு சுமாரான பையன் சூப்பரான பொண்ணுக்காக காத்து இருக்கிறான். அவன் விரும்பியபடி சூப்பரான பெண்ணை மனந்தானா இல்லையா என்பது தான் கதை. இதை மிக சுவாரசியமாக சினிமா தனம் இல்லாமல் எதார்த்தமாக நம்ம பக்கத்துக்கு வீட்டு பையனுக்கு நடக்கும் சம்பவம் போல் படமாக்கியுள்ளனராம்.சந்தையில பஜாருல அங்காடியில
மார்கடுல ஷாப்பிங் பண்ண முடியுமாடா காதல
என்ற கானா பாலா வின் பாடல் இந்த படத்தில் இடம் பெற்று உள்ளது. இந்த பாடல் யு -டியூபில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. கானா பாலா பாடியுள்ள மிகச்சிறந்த பாடல்களில் இந்த பாடல் குறிப்பிட தக்க ஒன்றாக அமையும் என்றும் இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெரும் என்றும் “ஆடி போனால் ஆவணி” பாடலுக்கு அடுத்து கானா பாலாவிற்கு இது நல்ல திருப்பு முனையை பெற்று தரும் என்றும் இயக்குனர் கூறினார்.
பொங்கல் முதல், இப்படத்தின் ட்ரைலர் – தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான திரை அரங்குகளில் காட்டப்படும் என்று இப்படக்குழுவினர் தெரிவித்தனர். பொங்கல் முடிந்து சில வாரங்களில் இத்திரைப்படம் வெளி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நகைச்சுவையோடு ஒரு அழகான சமூக கருத்தும் சொல்லப்பட்டு உள்ளதாம்.
இந்த படத்தில் “அசத்துதடி உன் அழகு” என்ற மீ டுடே பாடலை இயக்குனர் ராஜா சுப்பையாவே எழுதியுள்ளார். படத்தின் இந்த பாடலை இசை அமைப்பாளர் தன்ராஜ் மணிக்கம் பாடிஉள்ளாராம். . உமா சுப்ரமணியம், சீர்காழி சிற்பி ஆகியோர் மற்ற பாடல்களை எழுதி உள்ளனர்.
கதைக்காக நாயகன் ராஜா சுப்பையா பட்டினி கிடந்து தூங்காமல் நடித்துள்ளார். நேஹா காயத்ரி “உ” என்ற படத்தில் ஏற்கனவே நடித்துள்ளார்.