நேர்கொண்ட பார்வை’ படத்தை அடுத்து எச்..வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார் நடிகர் அஜித்.
இவரது ஜோடி பாலிவுட் நடிகை ஹுமாகுரேஷி.. யுவன் ஷங்கர் ராஜா இசை. நீரவ் ஷா ஒளிப்பதிவு .தயாரிப்பவர் போனி கபூர்
“. ஊரடங்கு காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், மக்கள் மாமூல் வாழ்க்கைக்கு திரும்பும் வரை வலிமை படம் குறித்து எந்தவித அப்டேட்டும் இப்போதைக்கு வேண்டாம்” என தயாரிப்பாளர்போனிகபூர் படக்குழுவை கேட்டுக்கொண்டிருக்கிறார்
படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் குறித்த தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.ஆனால் இப்பட ம் குறித்து அவ்வப்போது சில தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மொத்தம் 3 வில்லன்கள் இப்படத்தில் அஜித்துடன் மோத உள்ளதாகவும் அதில் ஒரு வில்லன் ‘ஆர்எக்ஸ் 100’ உள்ளிட்ட படங்களில் நடித்த கதாநாயக நடிகர் கார்த்திகேயா என்கிற தகவல் வெளியாகியுள்ளது
எதுவும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், கார்த்திகேயா தனது ட்விட்டர் பக்கத்தில் சிக்ஸ்பேக்குடன் இருக்கும் ஃபோட்டோவை வெளியிட்டு, ”இந்த லாக்டவுன் நம் திட்டங்களை மாற்றி விட்டது. ஆனால் அது நம் இலக்கை அது தடுக்காது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இவரது பதிவை பார்த்த அஜித் ரசிகர்கள் ‘வலிமை’ படத்திற்காக அஜித்துடன் இணைந்து நடிக்கும் காட்சிகளுக்கு காத்திருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.