பொன்மகள் வந்தாள் படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்த திரை உலக பிரபலங்கள் மனம் விட்டு பாராட்டுகிறார்கள் .தங்களது டிவிட்டர் பக்கங்களில் கருத்துகளை வெளியிட்டு இருக்கிறார்கள்.
“பொன்மகள் வந்தாள்… ஒவ்வொரு ஆண்மகனும் பார்க்க வேண்டிய திரைப்படம். பெண்மை காப்போம்… கிரியேட்டிவ் டீம் & ஜோதிகா மேடம்.. வாழ்த்துக்கள்..”என்று பதிவு செய்திருக்கிறார் .சமுத்திரக்கனி
“அறியாத வயதில் காமத்தை சுமந்து,வெளியில் சொல்ல முடியாமல் வாழும்,பெண்களுக்காக வந்திருக்கிறாள் இந்த பொன்மகள். இது பெண்களுக்கான படம் அல்ல,பாலியல் குற்றங்கள் செய்பவர்களுக்கான இது ஒரு பாடம்.. இயக்குனரின் இயக்கமும்,ஜோதிகா அவர்களின் உணர்ச்சி் சார்ந்த நடிப்பின் இறுதிக்காட்சிகள்
கண்களை கலங்கடித்து விட்டது. இந்த “பொன்மகள் வந்தாள்” கண்டிப்பாக சமூகத்தை கலங்கடிக்கும்..”என்று பாராட்டி இருக்கிறார் இயக்குனர் இமயம் பாரதிராஜா .