திரிஷாவின் முன்னாள் காதலர் என கிசுகிசுக்கப்பட்ட நடிகர் ராணா,கடந்த சில நாட்களுக்கு முன் தனது காதலி என ஐதராபாத்தைச் சேர்ந்த ‘ட்யூ ட்ராப் டிசைன்’ ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் ‘இன்டீரியர்’ டிசைனர் மிஹீகா பஜாஜ் தான் என்றும், அவர் தனது காதலை ஏற்றுக் கொண்டதாக ட்விட்டரில் பதிவிட்டு,. அவரது புகைப்படத்தையும் வெளியிட்டு இருந்தார்.
இவர்கள் திருமணத்தை வரும் டிசம்பர் மாதத்துக்குள் நடத்த முடிவு செய்துள்ளதாக ராணாவின் தந்தையும் பிரபல பட அதிபருமான சுரேஷ் பாபு அறிவிப்பு வெளியிட்டார்.இதையடுத்து, கடந்த 10 நாட்களுக்கு முன் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத் ராமா நாயுடு ஸ்டூடியோவில் நடந்தது.கொரோனா ஊரடங்கு காரணமாக நெருங்கிய உறவினர்கள் சிலர் மட்டுமே இதில் பங்கேற்றனர்.
இந்நிலையில் இவர்கள் திருமணம் ஆகஸ்ட் மாதம் 8 ம் தேதி நடக்க இருப்பதாகவும்,இத் திருமணத்தில் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே திருமணத்தில் கலந்துகொள்வார்கள் என்றும் ராணாவின் தந்தை சுரேஷ்பாபு கூறியுள்ளார்.இந்நிலையில் சென்னைக்கு வந்தால் எனக்கு தெரிந்த ஒரே முகவரி திரிஷா வீடு தான் எனக்கூறிய ராணா திருமணத்தில் நடிகை திரிஷா கலந்து கொள்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.