நாக் அஸ்வின் இயக்கத்தில் ,சைன்ஸ் பிக்சன் படமாக மூன்றாம் உலகப் போரை மையமாக வைத்து புதிய படம் ஓன்று உருவாகிறது.இப் படம்,தமிழ், தெலுங்கு இந்தி, ஆகிய மொழிகளில் உருவாகிறது. ரூ. 400 கோடி மெகா பட்ஜெட்டில் உருவாகும் இப் படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க, தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக வெளியான தகவலை படக்குழு மறுத்தது. ஆனால், தற்போது தீபிகா படுகோன் தான் கதாநாயகி என்கிறது படத் தரப்பு. லாக்டவுனுக்குப் பிறகு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்