மகாராஷ்டிரா மாநிலம்தான் கொரானாவில் முதலிடம் பெற்றிருக்கிறது. இரண்டாவது இடம் நமது சீர் மிகு சென்னைக்கு.!
இரண்டு மாத ஊரடங்குக்கு பிறகு இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகளை பல அரசுகள் அறிவித்து வருகின்றன,
தமிழ்நாட்டில் சின்னத்திரை ஷூட்டிங்குகளை 60 பேர்களுடன் நடத்திக் கொள்ளலாம் என்று அரசு நிபந்தனைகளுடன் அனுமதித்திருக்கிறது, ஆனால் சினிமா ஷூட்டிங் நடத்துவது பற்றி எதுவும் சொல்லவில்லை. ஆனால் அரசுடன் ரகசிய தொடர்பில் இருக்கிற சில சினிமாப்புள்ளிகள் ஜூன் 15க்குள் எப்படியும் அனுமதி கிடைத்து விடும் என்கிறார்கள்.
ஆனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் 16 பக்கங்களில் நெறிமுறைகளை நிரப்பி ஷூட்டிங் நடத்துவதற்கான வழிமுறைகளை அறிவித்திருக்கிறது .ஆகவே அங்கு விரைவில் படப்பிடிப்புகள் தொடங்கலாம் என எதிர்பார்க்கிறார்கள்.