தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் பி.லிட் )தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி வழங்கும் படம் “விசாரணை “ சமுத்திரகனி, அட்டகத்தி தினேஷ், கயல் ஆனந்தி, கிஷோர், முருகதாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். சந்திரகுமார் எழுதிய “ லாக்கப் “ என்ற நாவலை தழுவி இந்த இந்த படத்தை இயக்கியுள்ளார் வெற்றிமாறன்.
பிப்ரவரி 5 ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தை இன்று பார்த்த உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் இயக்குனர் வெற்றிமாறனையும் தயாரிப்பாளர் தனுஷையும் நெகிழ்ந்து பாராட்டினார்