‘காட்மேன்’என்கிற வெப்சீரியலில் ஜெயப்ரகாஷ்,டேனியல் பாலாஜி,சோனியா அகர்வால் ஆகிய திரைப்பட நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
இந்த சீரியல் ஜூன் 12 ஆம் தேதி ஓடிடி பிளாட் பார்மில் வெளியாகும் என அறிவித்தருந்தார்கள். அதற்காக ஒரு டீசரும் வெளிவந்தது. வந்த வேகத்திலேயே எதிர்ப்புகளையும் வாரி அள்ளிக்கொண்டது. வசனங்கள் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை தாக்குவதாக இருக்கிறது என கண்டனங்களை தெரிவித்தார்கள் .
குறிப்பாக “வேதங்களை பிராமணர்கள் மட்டும்தான் கற்று கொள்ள வேண்டும் என்று எந்த சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறது ?”என்கிற வசனம் புண் படுத்தியதாக சொல்கிறார்கள்.
கடும் எதிர்ப்பை தொடர்ந்து சர்ச்சைக்குரிய வசனங்களை கொண்ட காட்மேன் டீசரை நீக்கிவிட்டு,புதிய டீசரை வெளியிட்டுள்ளனர். வசனக்காட்சிகள் இருந்தா தானே பிரச்சனை ? என நினைத்தார்களோ என்னவோ, பழைய டீசரில் இருந்த சில காட்சிகளை வெட்டிவிட்டு, மீதமுள்ளவற்றை எந்த ஒரு வசனமும் இல்லாமல் வெறும் காட்சிகளை மட்டும் வைத்து, புதிய டீசராக வெளியிட்டுள்ளனர்.
இந்த சீரியலுக்கு காஞ்சி மடத்தில் இருந்து கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
பாஜக பிரமுகர் சுப்பிரமணியன் சாமியிடம் காஞ்சி மடம் சார்ந்தோர் பேசியிருக்கிறார்கள் .இதற்கு பிறகு அவர் மேலிடத்தில் தொடர்பு கொண்டு வசனங்களை மியூட் பண்ணியிருக்கிறார்கள்
தன்னிச்சையாக செயல்படும் ‘ஓடிடி’ பிளாட்பார்ம் நிறுவனங்கள் சென்சார்களை முடிந்தவரை அனுமதிப்பதில்லை.திரைப்படங்களை பொறுத்தவரை யூ சர்டிபிக்கேட், ஏ சர்டிபிகேட் என்று பல சென்சார் விதி முறைகள் இருந்தாலும் , வெப் சீரீஸ் என்று வந்து விட்டால் பெரும்பாலும் அடல்ட் கன்டென்ட்ஸ் தான் அதிகம் வருகிறது என்பது பலரின் குற்றசாட்டு.