“எப்பய்யா கல்யாணம்? பொண்ணு அனுஷ்காதானா சொல்லய்யா ?”என்கிற கேள்விகள் ஒரு பக்கம் சுழட்டி அடித்தாலும் எதை பற்றியும் கவலைப்படாதவர் பாகுபலி பிரபாஸ்.
பாகுபலி படம் அவரை பாலிவுட்டுக்குத் தள்ளிக் கொண்டு போனது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘சாஹோ’ படத்தில் நடித்தார். தமிழ், தெலுங்கு, இந்தி என மும்மொழிகளில் வெளியானது.
ரிசல்ட்?
ஏமாற்றம். தோல்வியை சந்தித்தது.இருந்தாலும் மனம் தளராத விக்கிரமாதித்தனாக , தற்போது கே கே ராதாகிருஷ்ணா இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் பிரபாஸ்,பூஜா ஹெக்டேவுடன் ஜோடிசேர்ந்து நடித்து வருகிறார்.
ஜார்ஜியாவில் படப்பிடிப்பு லாக்டவுன் காரணமாக தடைபட்டது .
இதையடுத்து பிரபாஸ் நடிக்கும்புதிய படத்துக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
நாக் அஸ்வின் இயக்கத்தில் ,சயின்ஸ் பிக்சன் படமாக மூன்றாம் உலகப் போரை மையமாக வைத்து இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.
இந்தப் படமும் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகிறது. சுமார்ரூ. 400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப் படத்தில் தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக வெளியான தகவலை படக்குழு மறுத்தது. அதிகமாக சம்பளம் கேட்டாராம்.கோச்சடையான் தோல்விப்படத்தில் நடித்தவர்தான் இந்த நடிகை.
ஆனால், தற்போது தீபிகா படுகோன் தான் கதாநாயகி என்கிறது படத் தரப்பு.கேட்ட சம்பளம் கிடைத்து விட்டதோ என்னவோ?
லாக்டவுனுக்குப் பிறகு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. ஏனிந்த குழப்பம்?