
இன்றைய தமிழ்ச்சினிமாவின் தவிர்க்க முடியாத முகம் பிரியா பவானி சங்கர்.
இந்தியன் 2 ,குருதி ஆட்டம் ,கசடதபற உள்ளிட்ட பல படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர், விஷால் ,ஹரிஷ் கல்யாண் ஆகியோரின் படங்களும் கமிட் ஆகி இருக்கிறது.
வெறும் நடிகையாக கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு கன்னாபின்னாவென பெயர் வாங்கும் நடிகைகளை விட இவருக்கு சமுதாயப்பார்வையும் இருக்கிறது.
புலம் பெயர் தொழிலாளர்களின் நடைப்பயணத்தில் அவர்களுக்கு எத்தனையோ இழப்புகள்.
அதில் அன்னையை இழந்த ஒரு குழந்தையும் உண்டு.
இதை வைத்து ‘பாரத் மாதா கீ’என்கிற டைட்டிலுடன் ஒரு கார்ட்டூன் .அதற்கு அடியில் பிரியா பவானி சங்கரின் எண்ணங்கள் .
படிக்கும்போதே கன்னத்தில் பளார் பல விழுவது போன்ற உணர்வு.!
இதோ….
“அந்த குழந்தையின் முகம்!
இனி கொரோனாவோடு வாழ நாம் பழகிக்குவோம். சரி!
இந்த குழந்தையின் முகம் நமக்குள்ளே தரும் குற்ற உணர்ச்சியும் பழகிடுமா?
இந்த நவீன உலகத்தில் சீக்கிரமே மருந்தோ, vaccination கூட கண்டுபிடிக்க வாய்ப்பிருக்கு. ஆனால் நடந்து தேயும் தொழிலாளியின் கண்ணீர் கறையை எதை கொண்டும் மறைக்க முடியாது.
“அவங்கள யாரு தண்டவாளத்துல படுக்க சொன்னது?” “பேசிகிட்டு இருக்காம மூட்டை முடிச்சிய தூக்கிட்டு நடக்க உதவுங்க” போன்ற அதிகார குரல்கள் நம் நிதர்சனத்தை காட்டிக்கொண்டே இருக்கும்.
பால்கனி கைதட்டல்களும், ஹெலிகாப்டர் பூ மழையும் எதுக்கு?
தனித்து தெருவில் விடப்பட்டவர்களுக்கு வேடிக்கையா?
தனித்து விடப்பட்ட ஒரு மாபொரும் கூட்டத்தின் கண்ணீருக்கும் ரத்தத்துக்கும் மேல் பொருளாதாரத்தை தூக்கி நிமிர்த்தி எந்த கோட்டையை கட்டப்போறோம்?
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை”
-குறள்
அந்த கண்ணீர் எந்த கோட்டையையும் அழிக்கும்னு பொருள்”என்று திருக்குறளை சொல்லி முடித்திருக்கிறார்.
செல்வத்தைத் தேய்க்கும் படை”
-குறள்
அந்த கண்ணீர் எந்த கோட்டையையும் அழிக்கும்னு பொருள்”என்று திருக்குறளை சொல்லி முடித்திருக்கிறார்.