வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிக்கொண்டு லாரியில் அடிபட்ட தவளை மாதிரி கிடக்கிறது வெப் சீரியல் காட்மேன்.
பிராமணர்களையும் இந்து மதத்தையும் இழிவுபடுத்தி காட்சிகள் இருக்கின்றன.ஆகவே அந்த வெப் சீரியலை தடை செய்ய வேண்டும் என்று இந்து அமைப்பினரும் பாஜக வை சேர்ந்த எஸ்.வி.சேகர் ,எச் ராஜா போன்றோரும் புகார் செய்திருந்தனர் .
காஞ்சி மடம் தலையிட்டதின் பேரில் சுப்பிரமணியன் சுவாமி இதை மேலிடத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.அந்த காட்மேன் ஒளிபரப்பாகாது என்கிற உத்தரவாதம் கிடைத்திருக்கிறது.
இதில் இன்னொரு பிரச்சனையை எழுப்பி இருக்கிறார்கள்.
“காட்மேனில் நடித்திருக்கிற டேனியல் பாலாஜி ஒரு கிறித்தவர்.அவரை வைத்து இந்து மதத்தை இழிவு படுத்தி இருக்கிறார்கள் “என்பதாகும்.
இதற்கு டேனியல் பாலாஜி என்ன சொல்லுகிறார்?
“நான் கிறித்தவன் கிடையாது.என்னுடைய பெயர் பாலாஜி. நான் நடித்த டேனியல் என்கிற கேரக்டர் பேசப்பட்டதால் டேனியல் பாலாஜி என்கிற பெயரை போட்டு வருகிறார்கள் .
என்னய்யா என் பெயரைக் காணோமே டைட்டிலில் என்று சண்டை கூட போட்டிருக்கிறேன். அப்போதுதான் சொன்னார்கள் டேனியல் பாலாஜி என்பது உன்னுடைய பெயர்தான் என்று.
இந்த டீசர் வந்த பிறகு காசுக்காக நீ மலம் தின்னுவியா என்று கேட்டு இழிவு படுத்துகிறார்கள் .இதற்கு நான் என்ன பதில்சொல்ல முடியும்.? என்று கேட்கிறார் நடிகர் டேனியல் பாலாஜி.